தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை பாரதீய ஜனதா ஏற்படுத்தும் -தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி சர்பானந்தா சோனாவால் பேச்சு
- தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் அருகே தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரவளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் அருகே தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா, தமிழக பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செய லாளர் பொன் பாலகணபதி, மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன்,மாவட்ட துணைத்தலைவர்வக்கீல் எஸ்.பி.வாரியார் வரவேற்றனர்.
கூட்டத்தில் மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரவளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளுடன் சமபலம் பொருந்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது,இதற்கு காரணம் தினமும் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டிற்காக உழைக்கும் பிரதமர் நரேந்திரமோடி என்பதை உலகமே வியந்து பாராட்டி வருகிறது.
அவரது தலைமையில் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் மாநிலங்களும் வளர்ச்சி பெற்று வருகின்றது.ஒளிவு மறைவு அற்ற முறையில் திட்டப்பணி கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய தேசத்தின் வளர்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநில மக்கள் அனைவரும் பங்கு கொண்டு வருகின்றனர். அது போல தமிழகமும் வளர்ச்சி அடைய வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் தமிழகத்திலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி மலர வேண்டும் அதற்கு மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் சென்னை கேசவன்,தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சுவைதர்,சிவமுருகன் ஆதித்தன்,சின்னத்தங்கம், ஜனகராஜ்,வக்கீல் சண்முகசுந்தரம்,வக்கீல் சந்தானகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ் குமார், சிவராமன், பால்ராஜ், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம்,மாவட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் விந்தியா முருகன், மாநகர தெற்குமண்டல் தலைவர் மாதவன் தெற்கு மண்டல் பா.ஜ.க. வக்கீல் பிரிவு தலைவர் வெற்றிவேல்,தெற்கு மண்டல பொருளாதார பிரிவு தலைவர்முருகேசன், பொதுச் செயலாளர் மகேஷ், பொருளாளர் முத்துராஜ், துணைத்தலைவர் பொய் சொல்லான் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.