உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- சாராயம், கஞ்சா விற்பனை, மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற வற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ஒன்றிய பா.ஜ.க. சார்பாக பாச்சலூர், தாண்டிக்குடி பகுதியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
சாராயம், கஞ்சா விற்பனை, மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற வற்றை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டிப்பது, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பாச்சலூர் கிளை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் பசுபதி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஒன்றிய உறுப்பினர் அர்ஜுணன் நன்றி கூறினார்.