உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்
- எண்ைணய் வித்து பயிரான சூரியகாந்தி, 120 நாட்களில் வளரும் வீரிய ஒட்டுப்பயிராகும்.
- வாகனஓட்டிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
ஊட்டி,
ஊட்டி அடுத்த மசினகுடி, மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, சூரியகாந்தி மலர்கள் ஆகியவை பயிரிடப்பட்டு உள்ளன.
இது மைசூர் சாலையில் பந்திப்பூர் தாண்டி குண்டல்பேட் வரை, பல ஏக்கர் பரப்பளவில் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இதில் எண்ைணய் வித்து பயிரான சூரியகாந்தி, 120 நாட்களில் வளரும் வீரிய ஒட்டுப்பயிராகும். குறைந்த நீரில் வளர்ந்து அதிக மகசூல் தரக்கூடியது.
தமிழகத்தில் நீலகிரி முதல் கர்நாடகாவின் குண்டல்பேட் வரை கண்களை பறிக்கும் அழகுடன் சூரியகாந்தி மலர்கள் பூத்து குலுங்குவது, அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே அவர்கள் சூரிய காந்தி மலர்களுக்கு மத்தியில் நின்றபடி செல்போனில் செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.