மேலப்பாளையம் பகுதியில் நடைப்பயிற்சி செல்லும் பாதையில் மது பாட்டில்கள் - முறையாக பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சில இளைஞர்களின் தவறான செயல்களால் இப்பாதையில் மது பாட்டில்களும், மாட்டு சாணங்களும் கிடக்கின்றது. தினமும்் இரவு சிலர்் மது குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி சொல்கின்றனர்.
இதனால் நடைபயிற்சிக்காக தினமும் வரும் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு நடைபயிற்சி பாதையை தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் சுத்தம் செய்து பாதுகாத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.