உள்ளூர் செய்திகள்

மின்கம்பத்தின் மீது கார் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.

வெண்ணாம்பட்டி சாலையில் மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: இருளி்ல் தவித்த பொதுமக்கள்

Published On 2023-09-14 11:12 GMT   |   Update On 2023-09-14 11:12 GMT
  • மின் சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது.
  • மின்கம்பத்தை மின்சா ரத்துறை மாற்றி அமைத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி செல்லும் சாலையி்ல், கார் ஒன்று சாலையோரத்திலிருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்ததால் மின்சாரம் துண்டிக்கபட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதால் பொது மக்கள் அவதி குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து கே.கே நகர் குடியிருப்பு வாசிகள் கூறும்போது:-

வெண்ணாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வீடுகளிலிருந்த டிவி, பிரிட்ஜ், வாசிங்மெசின் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து என்ன நடந்தது என விசாரித்த போது தான் தங்களது குடியிருப்புகளுக்கு அருகே, கார் ஒன்று சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

மேலும் காரினை ஓட்டி வந்தவர் அளவுக்கதிகமாக மது போதையில் விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் கே.கே.நகர் குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கடியில் அவதிபட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் படிக்க முடியாமல் அவதிக்குள்ளா கியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், நாளை பகல் பொழுதி்ல். தான் பிரச்சனையை சரி செய்து குடியிருப்புகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க முடியும் என அலட்சியமாக தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதி விடிய, விடிய இருளில் மூழ்கியது. தருமபுரியில் இருந்து வெண்ணாம்பட்டி செல்லும் சாலை முக்கிய சாலையாக இருந்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளான மின் கம்பம் சாயும் தருவாயில் உள்ளது .

இந்நிலையில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்சா ரத்துறை மாற்றி அமைத்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News