நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- காற்று சுழற்சி மாறியதால் சென்னையில் மழை குறைந்தது.
- தென்கிழக்கு அரபிக் கடலிலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 12-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல்சின்னம்) வலுவிழந்தது. இருப்பினும், வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், திருவள்ளூா், வேலூா் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, கேரள கடலோரப் பகுதிகளை யொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலிலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.
இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்,
நாளை (15-ந்தேதி) தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடு துறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாத புரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 16-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்ன லுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.