உள்ளூர் செய்திகள்
வீரமாகாளி அம்மன் கோவில் தோரோட்டம்
- கடந்த ஜூன் மாதம் 20 ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
- ஜூன் 27 ந்தேதி செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி திருவிழா தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கடந்த ஜூன் மாதம் 20 ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
ஜூன் 27 ந்தேதி செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி திருவிழா தொடங்கியது.
நேற்று புதன்கிழமை 9 ம் நாள் திருவிழா மாலை 5 மணியளவில் தென்னங்குடி, களத்தூர், முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் மது எடுத்து வந்தனர்.
தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முன்பு இளைஞர்கள் விசில் ஊதிய படி மகிழ்ச்சியுடன் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
தேரோட்டத்தில் ஆத்தாளூர், பேராவூரணி, நாடாகாடு, கொன்றைக்காடு, மாவடுகுறிச்சி, கீழக்காடு, இந்திரா நகர், ஆண்டவன் கோவில், பூக்கொல்லை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.