சேத்தியாத்தோப்பு கரும்பு ஆலையில் சர்க்கரை துறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு
- கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது
- கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023 அரவைப் பருவம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 2500 டன் வீதம் அரவை நடைபெற்று வருகிறது. தற்போது வரை 2 லட்சத்து 45 ஆயிரம் டன் கரும்பு அரைக்கப்பட்டு உள்ளது. மேலும் சர்க்கரை ஆலையில் கூடுதல் மின் உற்பத்தி திட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர். கே பன்னீர்செல்வம் அவர்களின் உத்தரவின் படி சென்னை சர்க்கரை துறை ஆணையத்தில் இருந்து தலைமை பொறியாளர் பிரபாகரன் தலைமை ரசாயனார் ரவிச்சந்திரன். தலைமை கரும்பு அலுவலர் மாமுன்டி மற்றும் அதிகாரிகள் சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வரும் 2023-2024 அரவை பருவத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த ஆண்டிற்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகள் முழுவதும் அரவை செய்த பின்பு அரவை நிறுத்தப்படும் எனவும் இதனால் கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்புகளை விரைந்து வெட்டி அனுப்பி ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலையில் தலைமை ரசாயனார் செல்வேந்திரன் தலைமை பொறியாளர் ராம்குமார் தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனே இருந்தனர்.