உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க.வுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்கமுடியாது - முதல்வர் ஸ்டாலின்

Published On 2023-03-10 23:05 GMT   |   Update On 2023-03-10 23:05 GMT
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
  • தி.மு.க.வுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என்றார்.

சென்னை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வர காரணமாக உள்ளது.

மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர்; அதை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டார் கலைஞர்.

இஸ்லாமியர்கள் வேறு, தாம் வேறு என்று கலைஞர் நினைத்தது இல்லை. தி.மு.க.வுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது.

நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளீர்கள். விரைவில் அவர்கள் விடுதலை தொடர்பாக கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News