உள்ளூர் செய்திகள்

உடன்குடி செட்டியாபத்தில் 50 அடி உயர முழு பனை மரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

Published On 2023-11-27 09:02 GMT   |   Update On 2023-11-27 09:02 GMT
  • பனைமரத்தின் அடிப்பகுதியில் இருந்து, உச்சி வரை காய்ந்த பனை ஓலைகளை சுற்றி வைத்து சொக்கப்பனை அமைக்கப்பட்டது.
  • இரவு 9 மணி அளவில் திருக்கார்திகை சிறப்பு பூஜையுடன் சுவாமிகளுக்கு வழிபாடு செய்து பின்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று காலையில் காய்ந்த முழு பனை மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து கோவில்முன்பு நடவு செய்தனர்.

அதன் பின் பனை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, உச்சி வரை காய்ந்த பனை ஓலைகளை சுற்றி வைத்து சொக்கப்பனை அமைக்கப்பட்டது.

இதன் உயரம் 50 அடி ஆகும். இரவு 9 மணி அளவில் திருக்கார்திகை சிறப்பு பூஜையுடன் சுவாமிகளுக்கு படையல் செய்து வழிபாடு செய்து பின்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

இதற்கானஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயந்தி, அறங்காவலர்கள் குழு தலைவர் மகேஸ்வரன் அறங்காவலர்கள் ஜெகநாதன், சுமத்திர பிரகாஷ், சுந்தரராஜ், கஸ்தூரி மற்றும் ஆலய ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News