உள்ளூர் செய்திகள்

சுரண்டையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டபோது எடுத்தபடம்.

போகி பண்டிகை நாளில் பொதுமக்கள் தேவையற்ற குப்பைகள்- பொருட்களை எரிக்க கூடாது- சுரண்டை நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Published On 2023-01-09 09:32 GMT   |   Update On 2023-01-09 09:32 GMT
  • பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர், கமிஷனர் வலியுறுத்தியுள்ளனர்.
  • பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்களை போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது

சுரண்டை:

சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கமிஷனர் முகமது சம்சுதீன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகை யையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுத்தம் செய்யப்பட்டு அகற்றப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை களை சாலைகளிலும், வாறுகால்க ளிலும் கொட்டாமல் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதன்படி வார்டு எண் 6 இந்து நாடார் மண்டபம் அருகில், வார்டு எண் 10 வாடியூர் ரோடு, வார்டு எண் 14 சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகில், வார்டு 18 வரகுணராமபுரம், வார்டு எண்21 நகராட்சி அலுவலகம் பின்புறம் ஆகிய இடங்களில் குப்பைகளை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல் மேற்கண்ட இடங்களில் வழங்க கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற எந்த பொருட்களையும் போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் கருப்பசாமியால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராமர், ஜெயபிரகாஷ், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News