நாங்குநேரி அருகே கோவில் கொடை விழாவில் மோதல்; விவசாயியை தாக்கிய கும்பல்
- கச்சேரியை பார்க்க பூலத்தை சேர்ந்த விவசாயி முருகன் சென்றிருந்தார்.
- வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து, முருகனை சரமாரியாக தாக்கினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு சுடலைமாடசுவாமி கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது. கச்சேரியை பார்க்க பூலத்தை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 45) சென்றிருந்தார். கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, மூன்றடைப்பை சேர்ந்த வானுமாமலை மகன் முத்துக்குமார், பிச்சைக்கண்ணு மகன் கார்த்திக், பூலத்தை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் முருகன், முத்துராக்கு மகன் முத்துராஜ் ஆகிய 4 பேரும் ஆட்டம் போட்டனர். இதுசம்பந்தமாக அவர்களுக்கும், முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து, முருகனை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குமார் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.