உள்ளூர் செய்திகள்

பெண்ணாடம் அருகே இரு பிரிவினர் மோதல் 87 பேர் மீது வழக்கு: 2 பேர் கைது தனிப்படை அமைப்பு

Published On 2022-12-07 08:38 GMT   |   Update On 2022-12-07 08:38 GMT
  • புகாரளிக்க ராஜா தரப்பினர் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
  • மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் ெகாண்டனர்.

கடலூர்:  

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள துறையூரைச் சேர்ந்தவர்கள் நசின்ராஜ், ராஜா. வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த இவ்விருவரும் அரியலூர் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,-யில் படித்து வருகின்றனர். இவ்விருவருக்கும் ஐ.டி.ஐ.,-யில் கடந்த 5-ந் தேதி மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவி த்துள்ளனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தயாராக இருந்த ராஜாவின் ஆதரவாளர்கள் நசின்ராஜை மறித்து தாக்கினர். இதற்கு பதிலடியாக முருகன்குடி பஸ் நிறுத்தத்திற்கு சென்ற நசின்ராஜா தனது உறவினர்களுடன் சேர்ந்து ராஜாவை தாக்கினார்.

இதுகுறித்து புகாரளிக்க ராஜா தரப்பினர் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது துறையூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ராஜா தரப்பினரக்கும், அவ்வழியே வந்த நசின்ராஜ் தரப்பிற்கும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. இது மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் ெகாண்டனர். அப்போது சமாதானம் செய்ய வந்த போலீசார் எதிரிலியே இருதரப்பும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதில் பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர்கள் மூன்று பேர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் திட்டக்குடி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இரு தரப்பினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சமாதானம் பேசி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ராஜாவின் உறவினரான துறையூர் கிளைச் செயலாளர் மதியழகன் கூரை வீடு திடிரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து செய்தனர். துறையூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா தரப்பைச் சேர்ந்தவர்கள் 50-பேர் மீதும், நசின்ராஜ் தரப்பைச் சேர்ந்தவர்கள் 37-பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு தரப்பி லும் தலா ஒருவரென 2-பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடலூர் எஸ்.பி., சக்திகணேஷ் உத்தரவின் பேரில், விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின் தலைமையில் தனிப்படை அமைத்து, இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News