கோவில் விழாவில் இரு தரப்பினர் மோதல் - வீடுகளுக்கு தீ வைப்பு
- இரு தரப்பினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு, கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
- மூன்று வீடுகள், கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது போலீஸ் ஜீப்பின் முன்பக்ககண்ணாடி உடைக்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரியில் அய்யனார் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு, கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் மூன்று வீடுகள், கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜீப்பின் முன்பக்ககண்ணாடி உடைக்க ப்பட்டதுகபிஸ்த லம் உதவி ஆய்வாளர் ராஜ்கமல் படுகாயமடைந்தார். தொடர்ந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீ ந்திரன், பாபநாசம் துணைக் காவல்கண்காணிப்பாளர் பூரணி, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் மற்றும் அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசார்கள் குவிக்கப்பட்டு இரவு முழுவதும் ராஜகிரி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ராஜகிரி மெயின் ரோட்டில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ராஜகிரி பகுதி பதட்டமான சூழ்நிலையால் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்துபாப நாசம் காவல் ஆய்வா ளர் அழகம்மாள் வழக்கு ப்பதிவு செய்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.