உள்ளூர் செய்திகள்

பூட்டப்பட்டிருந்த அலுவலகம் அலுவலகம் மற்றும் வளாகத்தில் நிறுத்தி இருந்த குப்பை சேகரிக்கும் வாகனங்கள்.

துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்தம்- பணிகள் முடங்கின

Published On 2023-07-21 09:13 GMT   |   Update On 2023-07-21 09:13 GMT
  • முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
  • சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் அல்லப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் தினமும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அன்றாடம் நடைபெறும் தூய்மை பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்ப ட்டுள்ளது.

இதனால் கவுன்சி லர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் அன்றாட பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேரூராட்சியில் நேற்று மின்சார பொருட்கள், பிளம்பிங் பொருட்கள் டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த கவுன்சிலர்கள் சிலர் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோபமடைந்த பணியாளர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும், இதனை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, காலை 6 மணிக்கு வரவேண்டிய 61 துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை.

இதனால் அதிகாலை திறக்க வேண்டிய பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டிருந்தது. மேலும், குப்பைகள் சேகரிக்க பயன்படுத்தும் வாகனங்களும், அங்கேயே நிறுத்தப்பட்டி ருந்தது.

சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் அல்லப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News