கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
- பொட்டல்புதூர் கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலை பார்வையிட்டார்.
- ரூ.45.10 லட்சம் மதிப்பீட்டில் ராஜாகுடியிருப்பு முதல் கருத்தலிங்கபுரம் வரை அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு கோப்புகள், பதிவேடுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொட்டல்புதூர் கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலையும் பார்வை யிட்டார். தொடர்ந்து அவர் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.56 லட்சம் மதிப்பீட்டில் மைலப்பபுரம் முதல் நெல்லையப்பபுரம் வரை அமைக்கப்பட்ட சாலை யையும், வெங்கடாம்பட்டி கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45.10 லட்சம் மதிப்பீட்டில் ராஜாகுடியிருப்பு முதல் கருத்தலிங்கபுரம் வரை அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வெங்கடாம்பட்டி கிராம ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், செயலாளர் மாரியப்பன் ரவண சமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் முகம்மது உசேன், கோவிந்தப்பேரி பஞ்சாயத்து தலைவர் டி.கே. பாண்டியன், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் . வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.