தாமரைக்குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
- ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தாமரைக்குளம் சீரமைக்கும் பணி தொடங்கியது.
- ஆக்கிரமப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் நகரில் மிகப்பெரிய குளமான தாமரைக் குளம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த தாமரைக் குளம் பொய்கை தீர்த்தம் என முன்பு அழைக்கப்பட்டு வந்தது.
சீர்காழி நகர் பகுதியில் பெரும் நீர் ஆதாரமாகவும் இந்த தாமரைக் குளம் இருந்தது இந்நிலையில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த தாமரைக் குளம் தற்போது சீர்காழி நகர்பதி போகுது மக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கியது.
குளத்தில் உள்ள ஆக்கிரமப்புகள் அகற்றாமல் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தாமரைக் குளம் தூர்வாரும் பணியை திடீர் ஆய்வு செய்தார் .அப்போது தாமரைக் குளத்தில் நடைபெற்று வரும் சிமெண்ட் கட்டைகள் கட்டும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் மகாபாரதி பணிகள் தரமாக செய்திட அறிவுறுத்தினார்.
குளத்தின் படித்துறையை மீட்டு பார்க்கிறது முழுமையாக அகற்றி தூர்வாரிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி பாபு, நித்யா தேவி பாலமுருகன்,மற்றும் ஒப்பந்ததாரர் வெற்றி உடனிருந்தனர்.