ஜமாபந்தியில் 4 பேருக்கு பட்டா வழங்கிய கலெக்டர்
- ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், முதியோர் உதவி தொகையும் வழங்க ஆணை வழங்கினார்.
- வருகிற 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
பேராவூரணி:
பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் 1431 பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தொடங்கியது. நேற்று பெருமகளூர் உள்வட்டம் கிராம கணக்கு வழக்குகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும் 2 முதியோர் உதவி தொகை வழங்க ஆணையை வழங்கினார்.அப்போது, தாசில்தார் சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், வேளாண் துறையினர், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மற்ற துறையினர் கலந்து கொண்டனர்.இன்று குருவிக்கரம்பை உள்வட்டத்திற்கு ஜமாபந்தி நடைபெற்றது. வருகிற, 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.