அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கலெக்டர் பாராட்டு
- 2021-2022-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2021-2022-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய, சிறந்த வங்கிகளுக்கான விருது இந்தியன் வங்கி மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த வங்கி கிளை–களுக்கான விருதுகளில் முதலிடம் பெற்ற இந்தியன் வங்கி, மைக்ரோசெட் ராசிபுரம் கிளைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.15,000-க்கான உத்தரவு, 2-ம் இடம் பெற்ற கனரா வங்கி திருச்செங்கோடு கிளைக்கு, நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.10,000-க்கான உத்தரவு, 3-ம் இடம் பெற்ற தமிழ்நாடு கிராம வங்கி நாமகிரிப்பேட்டை கிளைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.5,000-க்கான உத்தரவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.