குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
- எம்.பி., சுப்பராயன் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடத்துவது குறித்தும் பேசினார்.
- பஞ்சு பதுக்கல் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 5வது மாவட்ட மாநாடு தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சி துவக்கமாக காளியப்பன் கொடியேற்றினார்.பழனிசாமி, செந்தில்குமார், சசிகலா தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் ரவி, இசாக், ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.இதில், மாநகர் மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளராக இசாக் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.எம்.பி., சுப்பராயன் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடத்துவது குறித்தும் பேசினார்.
திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பாலம் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். சேதமான ரோடுகள் சீரமைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், தினமும் குடிநீர் வழங்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில்வழியில் உரிய வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.தொழில்துறையை பாதுகாக்கும் வகையில்,நூல் விலை உயர்வு, பஞ்சு பதுக்கல் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.