குன்னூரில் 61 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
- மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
- தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அருவங்காடு,
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் குன்னூரில் 61 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் அவர்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மகப்பேறு உதவி திட்டங்கள், கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குன்னூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ரூபாய மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகம் ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.
குன்னூர் லயன்ஸ் கிளப் தலைவர் அஸ்வினி தன்வானி, பொருளாளர் நளினி லட்சுமணன், செயலாளர் ஸ்ரதா, உறுப்பினர்கள கோபால், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொருளுதவி செய்த தி.மு.க நகரமன்ற துணை தலைவர் வாஸிம் ராஜாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர பூங்கொடி, மேற்பார்வையாளர் கண்ணம்மா, கணகாணிப்பாளர் தேவரம்மா, வட்டார ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.