கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பயிற்சி பட்டறை
- தூத்துக்குடி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குதல் என்ற தலைப்பில் பேசினார்.
- மேலும் ‘கட்டமைக்கப்பட்ட மொழி வினவல்’ மற்றும் ‘பைதான்’ கணினி மொழிக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 'தொழில் வளர்ச்சி செறிவூட்டல் திட்டம்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் (பொறுப்பு) அனிதா வரவேற்று பேசினார். தூத்துக்குடி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குதல் என்ற தலைப்பில் பேசினார். மேலும் 'கட்டமைக்கப்பட்ட மொழி வினவல்' மற்றும் 'பைதான்' கணினி மொழிக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஒருங்கிணைப்பாளர் இந்துமதி நன்றி கூறினார்.
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணித கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக கணித அறிவியல் பள்ளி கவுரவ பேராசிரியர் மருதை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 'சி.எஸ்.ஐ.ஆர். தேர்வில் சிக்கல் தீர்க்கும் நுட்பம்' என்ற தலைப்பில் பேசினார். ஆதித்தனார் கல்லூரி கணிதத்துறை பசுங்கிளி பாண்டியன், அக்கல்லூரியின் கணிதத்துறை முன்னாள் பேராசிரியர் ராபர்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் முதுகலை மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவி அஷ்டலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தங்கம், உஷா பரமேஸ்வரி, வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர்.