சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பள்ளி செல்லும் நேரங்களில் செங்கல் சூளைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் பள்ளி குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.
சிவகிரி:
சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர குழு உறுப்பினர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிவகிரி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டார் சுற்றளவு பகுதி வரை செங்கல் சூளைகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அவ்வாறு இருந்தால் அவற்றினை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் உடனே அமல்படுத்த வேண்டும், பள்ளி செல்லும் நேரங்களில் செங்கல் சூளைகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் பள்ளி குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. அந்த நேரங்களில் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கருதி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும், சிவகிரி பேரூராட்சி வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் நகர துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், குருவு, மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.