உள்ளூர் செய்திகள்
பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவது குறித்த ஆலோசனை கூட்டம்
- பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது.
- அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஊராட்சி தலைவர் சந்திரா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் அசோக்கு மார், தலைமையாசிரியர்கள் தனலட்சுமி, ரவீந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள் ரேணுகா குமரகுரு, நீலவண்ணன், அங்கன்வாடி அமைப்பாளர் கஸ்தூரி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், கிராம நிர்வாக அலுவலர், அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆதனூர் ஊராட்சியில் பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது.