உள்ளூர் செய்திகள்

சேலம் வந்த 16 பேருக்கு கொரோனா

Published On 2022-08-10 09:03 GMT   |   Update On 2022-08-10 09:03 GMT
  • சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது ஆஸ்பத்திரி ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இன்றும் காய்ச்சல், தீராத சளி உள்ளிட்ட தொந்தரவுகளால் சிலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது ஆஸ்பத்திரி ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சேலம் மாநகராட்சியில் 11 பேர், வீரபாண்டி-4 பேர், கெங்கவல்லி-3 பேர், பனமரத்துப்பட்டி -2 பேர், மேட்டூர் நகராட்சி, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர்,கொளத்தூர், சங்ககிரி, ஓமலூர் தலா ஒருவர் என சேலம் மாவட்டத்தில் 26 பேர், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த தலா 8 பேர், சென்னை- 6 பேர், கரூர்-3 பேர், கிருஷ்ணகிரி-2 பேர், கள்ளக்குறிச்சி ஒருவர் என 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

இன்றும் காய்ச்சல், தீராத சளி உள்ளிட்ட தொந்தரவுகளால் சிலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்த விபரம் இன்று மாலை சுகாதார துறை சார்பாக வெளியிடப்படும் அறிக்கையில் தெரியவரும்.

Tags:    

Similar News