உள்ளூர் செய்திகள்

உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாணவனை படத்தில் காணலாம்.

அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்: 1500 மாணவர்கள் பங்கேற்பு

Published On 2023-10-10 09:06 GMT   |   Update On 2023-10-10 09:06 GMT
  • மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  • மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

கடலூர்:

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் போட்டி களை தொடங்கி வைத்த னர். இதில் இணை ஒருங்கிணை ப்பாளர் ராஜராஜ சோழன், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகானந்தம், கருப்பையன், மனோகர் பயிற்சியாளர் மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது. 14 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போ ட்டிகள் நடைபெறுகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News