உள்ளூர் செய்திகள்
தச்சநல்லூர் தேனீர் குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு
- குளத்துக்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.
- ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டு தொழுவத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே தேனீர் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
புகார்
இது தொடர்பாக ஏற்கனவே அப்பகுதி மக்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். இதை அடுத்து இன்று தச்சை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் உதவி பொறியாளர் லெனின் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கே சென்றனர்.
அப்போது அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டு தொழுவத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதனையொட்டி அங்கு தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.