உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.

மயிலாடுதுறையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-16 10:07 GMT   |   Update On 2022-10-16 10:07 GMT
  • இந்தி மொழி திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
  • தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நகர செயலாளரும் நகர மன்றத் தலைவருமான குண்டாமணி என்கின்ற செல்வராஜ் தலைமை தாங்கினார்.

மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ், ஜூபையர் அஹமது, நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பேசும்போது, தமிழக்கத்தில் ஒன்றிய அரசு தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி என்றார்.இந்நிகழ்ச்சியில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, வழக்கறிஞர் அணி ராம. சேயோன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.

Tags:    

Similar News