உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து செயல்விளக்கம்

Published On 2023-05-04 10:06 GMT   |   Update On 2023-05-04 10:06 GMT
  • தேன் எடுக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
  • விவசாயிகள் குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற முடிகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி ஆணைப்படி, வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் முத்துப்பேட்டை சாமிநாதன் உத்தரவின்படி தேனீ வளர்ப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.

விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமை தாங்கினர். இதில் தேனீ பூச்சிகளோடு கலந்த பெட்டிகள் கூடுதலான பெட்டிகள், தேன் எடுக்கும் கருவிகள், மூலம் தேன் எடுக்கும் முறை பற்றியும் விவ சாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில் தென்னை, வாழை, மாமரங்கள், பழ மரங்கள் காய்கறி செடிகள், பூச்செடிகள் போன்றவைகள் இருப்பதன் மூலம் தேனிகளால் மகரந்த சேர்க்கை நடைபெற்று அதன் மூலம் அதிகமாக மகசூல் பெற முடிகிறது அதுமட்டுமின்றி தேன் அதிகளவில் பெறவும் ஊட்டச்சத்து மிகுதியாக காணப்படுகிறது.

இதனால் விவசாயிகள் இதனால் விவசாயிகள் குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற முடிகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

மேலும் விவசாயிகள் கூறுகையில்:-

தேனீ வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப செயல் விளக்கத்தின் போது இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முத்துப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு அட்மா திட்ட தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் இடும்பாவனம் கிராம விவசாயிகள் கூறினர்.

Tags:    

Similar News