உள்ளூர் செய்திகள்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-31 07:22 GMT   |   Update On 2023-05-31 07:22 GMT
  • கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்து கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • விற்பனையாளர்கள், உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கோவில்பட்டி:

தமிழக அரசு எடை அளவு முத்திரை சட்டத்தின்படி எடை அளவுக்கான முத்திரை கட்டணத்தை 50 சதவீதம் அதிகரித்ததை கண்டித்தும், நகைக் கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகளுக்கான முத்திரைக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்தும் கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துராஜ், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் கண்ணன், பொருளாளர் தினேஷ், மொபைல் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் லாலா ஸ்வீட்ஸ் விற்பனையாளர்கள், கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், செல்போன் விற்பனையாளர்கள், மருந்து வணிகர்கள், பூச்சி மருந்து மற்றும் உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News