உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

கடலூர் மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு

Published On 2023-10-19 07:03 GMT   |   Update On 2023-10-19 07:03 GMT
  • நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும்.
  • சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

கடலூர்,:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம் சூரசம்கார தெரு, குழந்தை காலனி மற்றும் கால்வாய் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொதுமக்கள் மழைநீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாகவும், வீட்டு உபயோகப் பொருட்களில் நீர்சேகரம் ஆவதை தவிர்ப்பதின் மூலமும், நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துவதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்களின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம்.

சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார். இவ்வாய்வில் துணை இயக்குனர் (பொறுப்பு) (சுகாதாரம்) கீதாராணி, மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் , மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி , மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News