உள்ளூர் செய்திகள் (District)

பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி விழா யாகபூஜையுடன் தொடக்கம்

Published On 2024-10-28 06:46 GMT   |   Update On 2024-10-28 06:46 GMT
  • ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.
  • 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழா வாகவும் நடைபெறும்.

பசும்பொன்:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

முதல் நாள் இன்று ஆன்மிக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழா வாகவும் நடைபெறும்

ஆன்மிக விழாவை முன்னிட்டு இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் மற்றும் அவரது சிைல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இன்று காலை கணபதி யாக பூைஜகள் நடந்தது. பின்னர் அங்குள்ள பால முருகன், தேவர் திருமகனார் கோவிலுக்கு சிறப்ப பூஜை நடந்தது. இன்று மாலை 1008 திருவிளக்கு பூஜைகள் நடை பெறுகின்றன. இரவு ஆன்மீக சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம் நடக்கிறது.

நாளை (29-ந்தேதி) நடைபெறும் அரசியல் விழாவில் அரசியல் சொற் பொழிவுகள் நடைபெறும். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பால்குடம் மற்றும் முளைப்பாரி, வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

முக்கிய நிகழ்ச்சியான தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்றயை நாளில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ராமநாதாபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News