உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டிய காட்சி.

குற்றாலம் பகுதிகளில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்-கலெக்டர் அடிக்கல் நாட்டினார்

Published On 2023-05-12 08:36 GMT   |   Update On 2023-05-12 08:36 GMT
  • குற்றால அருவி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
  • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் செயல் படுத்தப்படும்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என 2022- 2023-ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

ரூ. 11 கோடியில் வளர்ச்சி பணி

அதன்படி குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. அந்த வகையில் ரூ. 11 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசும்போது, தற்போது பிரதான அருவிப் பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

அப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பறை, தோரணவாயில் புதுப்பித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் குற்றாலம் பேரூராட்சி ஆலோ சனையுடன் அடிப்படை தேவை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் செயல் படுத்தப்படும். தொடர்ந்து மற்ற பகுதிகளி லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்பெறு வார்கள் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொ றியாளர் சீனிவா சன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், மண்டல சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கார்த்திக்குமார், தலைமை செயல் அதிகாரி திருமலை நம்பிராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திர குமார் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News