தூத்துக்குடி வைப்பாரில் இருந்து திருச்செந்தூருக்கு 100 சைக்கிள்களில் யாத்திரை சென்ற பக்தர்கள் - ஆறுமுகநேரியில் சிறப்பு வழிபாடு
- ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் திடீரென ‘கினிங் கினிங்’ என மணி ஓசையுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஏராள மான சைக்கிள்கள் வந்தன.
- சுமார் 85 கி.மீ தூரத்தை கடந்து வந்து இவர்கள் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் உள்ள செந்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் நேற்று மாலையில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் இருந்தது.
இந்த வேளையில் அங்கு திடீரென 'கினிங் கினிங்' என மணி ஓசையுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஏராள மான சைக்கிள்கள் வந்தன. இதற்கு அங்குள்ள வர்கள் வழி விட்டு ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக சைக்கிளில் வந்த வர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் என்பது தெரிய வந்தது.அனைவரும் காவி, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தி ருந்தனர்.சைக்கிள்களில் பச்சைக்கொடி கட்டப்பட்டி ருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பகுதியை சேர்ந்த குருசாமியான ராஜகோபால் என்பவரின் தலைமையில் அங்கிருந்து நேற்று காலையில் 100 பேர் சைக்கிள்களிலும், 50 பேர் மோட்டார் சைக்கிள்களிலும் வந்தனர். 40-வது ஆண்டாக இந்த யாத்திரையை தொடங்கி உள்ளனர்.
சுமார் 85 கி.மீ தூரத்தை கடந்து வந்து இவர்கள் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் உள்ள செந்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதன் பின்னர் நேற்று இரவு திருச்செந்தூரை சென்ற டைந்த இவர்கள் இன்று காலையில் சுவாமி தரிசனம் முடித்த பின் அங்கே தங்கி விட்டு நாளை காலையில் மீண்டும் ஊர் திரும்புவதாக தெரிவித்தனர்.