திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
- கூட்டத்தில் முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிக படுத்த வேண்டும். பள்ளியில் 3 விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்த வேண்டும்.
- 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் கல்வித்துறை ,விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடிய அறிஞர்களைக் கொண்டு கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் ஆட்சி குழு தலைவர் டாக்டர் மதிச்செல்வன், பள்ளி தாளாளர் முருகேசன் நாடார் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத் தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். சங்கச் செயலாளர் துரை சங்கத்தின் செயல் திட்டங்களை விளக்கி கூறினார். உதவி தலைவர் சண்முகவேலு சென்ற ஆண்டு கூட்டத் தீர்மானங்களை பற்றி வாசித்தார். கூட்டத்தில் முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிக படுத்த வேண்டும். பள்ளியில் 3 விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்த வேண்டும்.
நன்றாக படிக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் தேசிய நல்லாசிரியர் முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தனபாண்டியன் பிறந்த நாள், ஆசிரியர் தினநாள், முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் கல்வித்துறை ,விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடிய அறிஞர்களைக் கொண்டு கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில்சங்க ஆலோசனை குழு உறுப்பினர் முன்னாள் தலைமை ஆசிரியர் நடராஜன் உள்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் மதி தேவராஜ் நன்றி கூறினார்.