உள்ளூர் செய்திகள்

கட்டிடத்தில் சிக்கிய ஒருவரை மீட்டுவரும் பேரிடர் குழுவினர்.

ஏற்காட்டில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஒத்திகை

Published On 2022-07-14 07:28 GMT   |   Update On 2022-07-14 07:28 GMT
  • கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டால் தப்பிப்பது எப்படி? என ஏற்காட்டில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழவினர் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
  • கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளே சென்று எப்படி மீட்பது என்றும் விளக்கினர்.

ஏற்காடு:

தேசிய பேரிடர் மீட்பு படையினர் சேலம் மாவட்டத்தில் சுற்று பயணம் செய்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மழை மற்றும் புயல் நேரங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு உள்ள அரசு பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது கட்டிடங்கள் சேதமடைந்தாலோ அதில் இருந்து தப்பிப்பது எப்படி ? என செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இது தவிர கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி உள்ளே சென்று எப்படி மீட்பது என்றும் விளக்கினர். கட்டிடங்களின் மேல் பகுதியில் இருந்து கம்பி மூலம் பொதுமக்களை காப்பாற்றுவது எப்படி என்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இவர்களுடன் ஏற்காடு வருவாய் பேரிடர் மீட்பு குழுவினர் ஏற்காடு வட்டாச்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன், வெங்கடேசன், வனத்துறையினர், சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார், 108ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அர்ஜூன், மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News