உள்ளூர் செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

கோட்டூரில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கல்

Published On 2023-02-04 08:10 GMT   |   Update On 2023-02-04 08:10 GMT
  • நெல் சாகுபடி செய்வதற்கும், சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கும் கடன் தொகையை பயன்படுத்தவேண்டும்.
  • குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 30 மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம் சிவசண்முகம் தலைமை தாங்கினார்.

சங்க செயலாளர் (பொ) எஸ்மணிமாறன் வரவேற்று பேசினார். திருத்துறைப்பூண்டி க.மாரிமுத்து எம்.எல்.ஏ., கோட்டூர் ஒன்றியகுழு தலைவர் மணிமேகலை முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மிக சாதாரண ஏழை எளிய மக்கள் கந்துவட்டி கொடுமையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் சுய உதவிக் குழு அமைத்து அரசு மூலம் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயனடைந்துள்ளனர் நமது முதல்வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதலாக கடன் வழங்கும் திட்டதை செயல் படுதி வருகிறார் ஆனால் சில மகளிர் குழு உறுப்பினர்கள் அரசு வழங்கும் கடன் தொகையை கூடுதல் வட்டிக்கு தனி நபர்களிடம் கடன்கொடுக் கிறார்கள்.

பின்னர் அதை வசூல் செய்ய முடியாமல் ஏமாந்து போகிறார்கள் இந்த மகளிர் குழு உறுப்பினர்களை நான் கேட்டுக் கொள்வது இந்த கடன் சங்கத்தில் வழங்கப்படுகிற கடன் தொகையை ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்க்கவும் நெல் சாகுபடி செய்வதற்கும் சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கும் பயன்படுத்தவேண்டும்.

இதன் மூலம் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம் செந்தில்நாதன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா கள மேலாளர் ஆர் வீரசேகரன் உதவி கள மேற்பார்வையாளர் வி.முத்துக்குமார் எழுத்தர் சித்ரா அலுவலக பணியாளர்கள் வேம்பையன் சதீஷ் பாண்டியன் ராஜசேகரன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் முதுநிலை எழுத்தர் டி.சத்யநாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News