- 15 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
- 100-க்கும் அதிகமான பறவை வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி உள்ளிட்ட 15 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்தி கேயனி தலைமையில் உதவி வன பாதுகாவலர் ராஜமா ரியப்பன் மேற்பார்வையில், 40-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், வன பணியாளர்கள் மற்றும் 50 தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி தொலை நோக்கு கருவி, கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, செந்நாரை, மீன்கொத்திகள், கடலை குயில், மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட 100-க்கும் அதிகமான பறவை வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உரிய படிவத்தில் பதிவு செய்யப்பட்டன.
கணக்கெடுப்பு பணியின்போது ஓசூர் டி.வி.எஸ். தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளில் மஞ்சள் மூக்குநாரை பறவை காணப்பட்டது. இந்த பறவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இங்கு வந்து, பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து, பராமரித்து பிறகு செல்ல தொடங்கும்.
இந்த வகை பறவைகள் இங்கு கடந்த 20 ஆண்டுகளாக வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
மேலும், அஞ்செட்டி அருகில் உள்ள பனை ஏரியில் பிளாக் ஸ்டார்க், அகலவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவையி னங்களும், தளி அருகே உள்ள வண்ணம்மாள் ஏரியில் பாம்புண்னி கழுகு பறவையினங்கள் காணப்ப ட்டன.
ஓசூரில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தினர் உதவி யுடன் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனை வருக்கும் வனத்துறையின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.