அரசு பஸ்சில் மூதாட்டியிடம் தரக்குறைவாக பேசிய கண்டக்டர் பணியிடை நீக்கம்
- கண்டெக்டர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்துள்ளார்.
- பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34 ஏ என்ற அரசு டவுன் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். மீண்டும் அதே பஸ்சில் திரும்பி ஏறினார்.
இதற்கு கண்டெக்டர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்துள்ளார். டவுன் பஸ்ஸில் இலவச பயணம் என்றால் அடிக்கடி பஸ்ஸில் சென்று வருவீர்களா என கேட்டார்.
இதற்கு அந்த மூதாட்டி, ஏன் இப்படி பேசுகிறீர்கள், நான் கோவிலுக்கு மாலை போட்டு உள்ளேன். அதனால் ஊரிலிருந்து கோவிலுக்கு வந்தேன் என கூறினார்.
இருந்தாலும் தொடர்ந்து கண்டக்டர், அந்த தரக்குறைவாகவே பேசி வந்தார்.
இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் இந்த செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த காட்சிகள் வெளியான தையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர், மானங்கோரையை சேர்ந்த கண்டக்டர் ரமேஷ் குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.