மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி-ரெட்டியார்பட்டி அணி கோப்பையை வென்றது
- நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தென்காசியில் நடந்தது.
- தென்காசி மாவட்ட அளவில் 14 அணிகள் பங்கேற்றன.
வீ. கே. புதூர்:
தென்காசி கால்பந்து கழகம் மற்றும் வி.டி.எஸ்.ஆர். சில்க்ஸ் இணைந்து நடத்திய சுசில் பிஸ்வாஸ் நினைவு கோப்பை நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தென்காசியில் நடந்தது.
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த போட்டிக்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் இசக்கித்துரை தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர் சாதிர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் காமேஷ் வரவேற்றார்.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர்கள் ரஹ்மான், செய்யது அலி பாதுஷா வாழ்த்தி பேசினர். போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 14 அணிகள் பங்கேற்றன.
இதில் முதல் பரிசை ரெட்டியார்பட்டி கால்பந்து அணியும், இரண்டாம் பரிசை ஆலங்குளம் அசுரா கால்பந்து அணியும், மூன்றாம் பரிசை தென்காசி கால்பந்து அணியும், நான்காம் பரிசு ஆலங்குளம் கால்பந்து அணியும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை விடிஎஸ்ஆர் சில்க்ஸ் இம்ரான்கான், நகர்மன்றத் தலைவர் சாதிர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஜேபி கல்லூரி விளையாட்டு அலுவலர் மனோகரன் சாமுவேல் ஆகியோர் வழங்கினர்.
போட்டியில் தென்காசி கால்பந்து கழக பொருளாளர் இசக்கிராஜ், விஜயகுமார், இசக்கிபாண்டி, ஜோதி, கார்த்திக், திமுக நிர்வாகிகள் ஷேக்பரீத், இலக்கிய அணி ராமராஜ், வக்கீல் ரகுமான் சதாத், இளைஞரணி வெங்கடேஷ், இசக்கிமுத்து, முருகேசன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி கால்பந்து கழக தலைவர் சிதம்பரம் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மாவட்ட கால்பந்து கழக செயலாளரும், பயிற்சியாளருமான டாக்டர் பிஸ்வாஸ் செய்திருந்தார்.