உள்ளூர் செய்திகள்

தாட்கோ சார்பில் வங்கி கடனுதவிக்கான மாவட்ட அளவிலான தேர்வுக்குழு நேர்காணல்

வங்கி கடனுதவிக்கான மாவட்ட அளவிலான தேர்வுக்குழு நேர்காணல்

Published On 2022-08-14 09:55 GMT   |   Update On 2022-08-14 09:55 GMT
  • விவசாயிகளுக்கு டிராக்டர் கடன் வழங்குவதற்கு நிலம் அவசியமில்லை என்பதையும் தாட்கோ வழியாக நடைமுறைப் படுத்தியுள்ளோம்.
  • தட்கல் முறையிலான மின் இணைப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு பயனாளிகள் 10 சதவீத தொகையினை செலுத்தினால், மீத முள்ள தொகையினை ஆதி திராவிடர் நலத்துறை செலுத்தும்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பிற்கான திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவிக்கான மாவட்ட அளவிலான தேர்வுக்குழு நேர்காணலினை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் உ.மதிவாணன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். பூண்டி.கே.கலை வாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் மதிவாணன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,

தாட்கோ மூலமாக கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக முதலமைச்சர் ஆணைகிணங்க திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களான தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவி பெறுவதற்காக 97 விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடை பெறுகிறது. முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30.6.22 வரை 202 பேருக்கு ரூ.158 லட்சம் மானியமாக தாட்கோ மூலம் வழங்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வரை முறைப்படுத்தப்பட்ட தனியார் வங்கிகள் மூலம் தாமதமில்லாமல் பயனாளி களுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. எந்த வங்கிகள் பயனாளிகளுக்கு கடன் வழங்க தயாராக இருக்கிறார்களோ அந்த வங்கிகளுக்கு மானியங்கள் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடனுதவி திட்டங்களில் பயன்பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக இருந்ததை ரூ.3 லட்சமாக உயர்த்தி முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு டிராக்டர் கடன் வழங்குவதற்கு நிலம் அவசியமில்லை என்பதையும் தாட்கோ வழியாக நடைமுறைப் படுத்தியுள்ளோம். ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு தட்கல் மூலம் விவசாய மின் இணைப்பிற்கு பெறுவதற்கு, மின் இணைப்பிற்கான கட்டணமும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தட்கல் முறையிலான மின் இணைப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு பயனாளிகள் 10 சதவீத தொகையினை செலுத்தினால், மீத முள்ள தொகையினை ஆதி திராவிடர் நலத்துறை செலுத்தும்.

கடனுதவி வழங்கும் தேர்வுக்குழு நேர்காண லின்போது உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்திலும் அவர்களுக்கு கால அவகாசம் அளித்து அந்த ஆவணங்களை அவர்கள் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தாட்கோ மூலம் 2500 பயனாளிகள் பல்வேறு கடனுதவி திட்டங்களின் கீழ் பயன்பெற்றுள்ளனர் என தெரிவித்தார்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சித் துணை த்தலைவர் கலியபெருமாள், தாட்கோ மேலாளர் விஜய குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருபுரசுந்தரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News