நிர்மலா சீதாராமனை குறி வைத்து தி.மு.க.வும் காங்கிரசும் தாக்குகிறது-வானதி சீனிவாசன்
- வயிற்றெரிச்சலில் சாதி வர்ணம் வேறு பூசுகிறார்கள்.
- தி.மு.க.வும், கங்கிரசும் குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.
சென்னை:
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை குறி வைத்து தி.மு.க.வும், காங்கிரசும் தாக்குகின்றன. அதன் மற்று மொரு வெளிப்பாடுதான் கோவை சம்பவத்தின் பின்னணி என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க. ஆட்சியில் பட்டியலினத்தவர்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் ஒரு பெண்மணி உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்.
இவர்கள் செய்யும் தவறுகளை பாராளுமன்றத்தில் பட்டியலிடுகிறார். இவர்கள் பேசுவதை புரிந்து கொண்டு தமிழிலேயே பதிலும் கூறுகிறார்.
இவர்கள் செய்யும் எல்லா தவறுகளையும் டெல்லியில் தோலுரித்து விடுகிறார் என்பதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலில் இதில் சாதி வர்ணம் வேறு பூசுகிறார்கள்.
தமிழகத்தில் மத்திய நிதி மந்திரியை தனிப்பட்ட முறையில் தி.மு.க.வும், கங்கிரசும் குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.
அதனால்தான் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.