உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கடலூரில் தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு

Published On 2022-07-23 08:52 GMT   |   Update On 2022-07-23 08:52 GMT
  • கடலூரில் தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் வலியுறுத்தினார்.
  • பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களிடையே செல்வாக்கு பெற்றார்.

கடலூர்:

அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாதிரிக்குப்பம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். மீனவர் அணி செயலாளர் தங்கமணி, பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் முதன்முதலாக தமிழக மக்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக ெஜயலலிதா வழங்கினார். மேலும் வீட்டு மின் இணைப்புகளுக்கு பல சலுகைகளை கொடுத்த அரசு அதிமுக அரசு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது.கள்ளக்குறிச்சி சம்பவமே இதற்கு சாட்சி. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. இதை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு இப்போது மின்தடை மாநிலமாக உள்ளது. நமது இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களிடையே செல்வாக்கு பெற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் பக்கிரி, மணிமேகலை தஷ்ணா, வர்த்தக பிரிவு வரதராஜன், இலக்கிய அணி ஏழுமலை, பகுதி கழக செயலாளர்கள் வெங்கட்ராமன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வினோத்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், கல்யாணி ரமேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணிமுருகன், அலமேலு ராஜி, ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News