தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் முகக்கவசம் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்
- செவிலியர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
- செக்யூரிட்டிகள் மற்றும் நோயாளிகளும் முககவசம் அணிந்து வர வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் அறிவித்தார்.
அதன்படி இன்று தஞ்சைராசாமி ராசுதார் அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வரும் மருத்து வர்கள், செவிலி யர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர்.
மேலும் மருத்துவமனை பணியாளர்கள், செக்யூரிட்டிகள் மற்றும் நோயாளிகளும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவமனை நிலைய அதிகாரி டாக்டர் செல்வம் அறிவுறுத்தினார்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.