உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே கனமழையால் ரூ.18 லட்சம் மதிப்பிலான நாட்டுக்கோழிகள் உயிரிழப்பு
- 6 ஆயிரம் கோழிகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.
- பண்ணையில் வெள்ளம் புகுந்து, கோழிகள் உயிரிழப்பு.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சின்ன ஆலரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (39) என்பவர் நாட்டுக்கோழி குஞ்சுகளை பண்ணையில் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் அவரது பண்ணையில் இருந்த சுமார் 6 ஆயிரம் கோழிகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.
ஒவ்வொரு கோழியும் சராசரியாக 3 கிலோ எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பாஸ்கருக்கு ரூ.18 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து பாஸ்கர் கூறுகையில், கனமழையால் பண்ணையில் வெள்ளம் புகுந்து, கோழிகள் மூச்சுத்திணறி இறந்துவிட்டன. இதனால் நான் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளேன் என்று கூறினார்.