உள்ளூர் செய்திகள்

பூஞ்சேரியில் மண்பானை தொழில் செய்யும் பாரம்பரிய குடும்பத்தினர்.

களிமண் தட்டுப்பாடு காரணமாக பொங்கல் மண்பானை விலை ஏற்றம்- விற்பனை மந்தம்

Published On 2023-01-14 11:35 GMT   |   Update On 2023-01-14 11:35 GMT
  • களிமண் தட்டுப்பாடு காரணமாக பானைகள் ரூ.100 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
  • ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதித்தால் விலை குறையும் விற்பனையும் அதிகரிக்கும்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் மண்பானை, சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கும் குடும்பத்தினர் உள்ளனர். பொங்கல் திருநாள் விற்பனைக்காக ஒரு மாதமாக பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முதல் பானைகளை சந்தைகளில் விற்க துவங்கினர். களிமண் தட்டுப்பாடு காரணமாக பானைகள் ரூ.100 முதல் 250 வரையும், அடுப்புகள் ரூ.150 முதல் 200 வரையும் விலை சற்று அதிகமாக வைத்து விற்கப்பட்டது.

இதனால் மண்பானை விற்பனை குறைந்தது, ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதித்தால் விலை குறையும் விற்பனையும் அதிகரிக்கும் என மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News