உள்ளூர் செய்திகள்

நாச்சிளம்பட்டி குடியிருப்புகள் முன்பு சாக்கடைக்காக பள்ளம் தோண்டி இருப்பதை படத்தில் காணலாம்.

சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி

Published On 2022-06-21 11:10 GMT   |   Update On 2022-06-21 11:10 GMT
  • தீவட்டிபட்டி அருகே சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 6 மாதம் ஆகியும் பணிகள் நடக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த நாச்சனம்பட்டி காலனி 12 - வது வார்டு பகுதியில் சுமார்100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதி இன்றி வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒப்பந்ததாரர் சார்பாக சாக்கடை வசதி அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது.

ஒவ்வொரு குடியிருப்புகள் முன்பு சுமார் 5 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மரப்பலகை வைத்து வீட்டுக்குள் சென்று வருகின்றனர்.

முதியோர்கள் இதில் நடக்க இயலாமல் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி வெகுநாட்கள் ஆகியும் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாக்கடை வசதி மற்றும் குடிநீர் இணைப்பு ஆகிய பணிகளை உடனடியாக செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News