உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள். 

கடலூரில் சிப்காட் தொழிற்சாலைகளை கண்டித்து த.வா.க. போராட்டம்: வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்பு -ஆயிரம் போலீசார் குவிப்பு

Published On 2023-10-10 09:13 GMT   |   Update On 2023-10-10 09:13 GMT
  • திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
  • அசம்பாவிதம் நடைபெறா மல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

கடலூர்:

கடலூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டம் கடலூர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று சிப்காட் திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கவுன்சிலர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. ஆனால் த.வா.க வினர், எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்ட மாக தெரிவித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் போலீசார் சார்பில் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கு பதில் கடலூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்க ணக்கானோர் காலை முதல் போராட்ட த்தில் கலந்து கொள்வதற்கு திரண்டு வந்தனர். இதனைத் தொட ர்ந்து கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பே ட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரம் போலீசார் கடலூர் பகுதியில் குவிக்கப்பட்டனர் . மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா மல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிப்காட்டில் இயங்கி வரும் தொழி ற்சாலைகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்மு ருகன் எம். எல்.ஏ தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கவுன்சிலர் கண்ணன் வரவேற்றார். இதில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால் வளவன், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில அமைப்பு குழு உறுப்பினர் ஆனந்த் , மாநகர மாவட்ட செயலாளர் லெனின், மாநகராட்சி கவுன்சிலர் அருள் பாபு உட்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் கடலூரில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. த.வா.க.வினரின் போராட்டம் காரணமாக கடலூரில் கடும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்தனர். போராட்டத்தால் கடலூர் ஸ்தம்பித்தது.

Tags:    

Similar News