உள்ளூர் செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி பாளையில் மெழுவர்த்தியுடன் கிறஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்ட காட்சி.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்- நெல்லையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2023-04-09 09:35 GMT   |   Update On 2023-04-09 09:35 GMT
  • தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும்.
  • இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நெல்லை:

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது.

தவக்காலத்தில் தவக்கால நடைபயணம், சிறப்பு தியானம், திருப்பயணம், சிலுவை பயணம் உள்ளிட்டவைகளை மேற்கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அத வகையில் கடந்த 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து 6-ந் தேதி பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல், நேற்று முன்தினம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறை யப்பட்டதை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் 3நாட்களுக்கு பின்னர் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடு கின்றனர். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நெல்லை

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாளை தெற்கு பஜாரில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு 12 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி இயேசுவின் உயிர்தெழுதலை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு இயேசு உயிர்ப்பித்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இது போன்று பாளை தூய திரித்துவ பேராலயம், சீவலப்பேரி சாலை புனித அந்தோணியார் தேவாலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகர் குழந்தை ஏசு தேவாலயம், உடையார்பட்டி இயேசுவின் திருஇருதய ஆலயம்,

நெல்லை டவுன் அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி.நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டை அந்தோணியார் தேவாலயம், சேவியர்காலனி தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட மாநகர பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் திசையன்விளை, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ராதாபுரம், வள்ளியூர், களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News