உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் காமராஜ்.

தஞ்சையில் 16-ந் தேதி நடக்க இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

Published On 2023-11-14 09:41 GMT   |   Update On 2023-11-14 09:41 GMT
  • தஞ்சையில் பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
  • பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

தஞ்சாவூர்:

அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கடந்த மாதம் 4-ந்தேதி நடைபெற இருந்த கூட்டம் மழை காரணமாக நாளைமறுதினம் 16-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் கன மழை பெய்யும் எனவும், தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருகின்ற 16-ந்தேதி புயல் சின்னமாக மாறும் என அறிவித்துள்ளது.

எனவே பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் பெற்று 16-ந்தேதி நடைபெற இருந்த 52-ம்ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தஞ்சையில் நடந்த பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

Tags:    

Similar News